'வேட்டையன்' படத்தின் வீடியோவை வெளியிட்ட லைகா... ரித்திகா சிங் கேரக்டர் அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது வேகமாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் உலகமெங்கும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு, செப்டம்பர் 20ஆம் தேதி சென்னையில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘வேட்டையன்’ படத்தில் நடித்த நடிகர்களின் கேரக்டர்கள் இன்று முதல் அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. முதல் கட்டமாக, முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ள ரித்திகா சிங், 'ரூபா' என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், லைகா நிறுவனம் தனது சமூக வலைதளங்களில் ரித்திகா சிங்கின் கேரக்டரை மையமாக கொண்டு சில காட்சிகளை வீடியோவாக வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகும் இப்படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகினி, ரமேஷ் திலக், ரக்சன், ஜிஎம் சுந்தர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில், எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவில், பிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
Get ready for some high-octane action! 🔥 Introducing @ritika_offl as ROOPA in VETTAIYAN 🕶️ Witness her strength and power-packed performance on the screen. 💥#Vettaiyan 🕶️ Releasing on 10th October in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan… pic.twitter.com/bAGH00a4Fe
— Lyca Productions (@LycaProductions) September 16, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments