இது தந்தை-மகன் உறவு. கமலுக்கு பாராட்டு தெரிவித்த ரஜினி தயாரிப்பாளர்
Tuesday, August 23, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு செவாலியே விருது கிடைத்திருப்பது அவருக்கு மட்டுமின்றி உலகில் உள்ள தமிழர்கள் அனைவருக்குமே ஒரு பெருமையான விஷயமாக கருதப்படுகிறது. ஒவ்வொருவரும் தனக்கே அந்த விருது கிடைத்ததுபோல் கடந்த இரண்டு நாட்களாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினியின் '2.0', உள்பட பல திரைப்படங்களை தயாரித்து வரும் லைகா நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் ராஜூ மகாலிங்கம் இன்று கமல்ஹாசனை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் 'எங்கள் இருவருக்கும் தந்தை-மகன் உறவு உள்ளது' என்று தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் தற்போது நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' படத்தையும் லைகா நிறுவனமே தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments