'பாகுபலி 2' படத்துடன் கனெக்சன் ஆனது ரஜினியின் '2.0'

  • IndiaGlitz, [Thursday,June 15 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஷங்கரின் பிரமாண்ட படைப்பான '2.0' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் எடிட்டிங் முற்றிலும் முடிவடைந்து விரைவில் பின்னணி இசைப்பணி தொடங்கவுள்ளது என்பதை நேற்று பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் வியாபாரத்தை தயாரிப்பு நிறுவனம் விறுவிறுப்புடன் தொடங்கிவிட்டது. ஏற்கனவே இந்த படத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ரூ.110 கோடிக்கு பெற்றுள்ளதாக செய்திகள் வெளியானது இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரிலீஸ் உரிமையை ஏஏ பிலிம்ஸ் என்ற நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து பெற்றுள்ளது. இந்த நிறுவனம் ரூ.80 கொடுத்துள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல் தெரிவிக்கின்றனர். எனவே கிட்டத்தட்ட இந்த படத்தின் பட்ஜெட்டில் பாதி வருமானம் தற்போது தயாரிப்பு நிறுவனத்திற்கு கிடைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தி உரிமையை பெற்றுள்ள ஏஏ பிலிம்ஸ் சமீபத்தில் 'பாகுபலி 2' படத்தின் இந்தி ரிலீஸ் உரிமையை பெற்று மிகபெரிய லாபத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 'பாகுபலி 2' படத்தை போலவே '2.0' படத்திற்கு பிரமாண்டமாக விளம்பரம் செய்து வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.