பிரபல அரசியல்வாதிக்கு லைகா நிறுவனம் அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீஸ்
- IndiaGlitz, [Monday,March 27 2017]
பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் இலங்கையில் ஏற்பாடு செய்திருந்த ஈழத்தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழாவில் கலந்து கொள்ள முதலில் ஒப்புக்கொண்டிருந்த ரஜினிகாந்த், பின்னர் தமிழக அரசியல்வாதிகள் சிலர் தெரிவித்த எதிர்ப்பு காரணமாக விழாவில் கலந்து கொள்ளும் திட்டத்தை ரத்து செய்தார்.
இந்நிலையில் ரஜினி இலங்கைக்கு போகக்கூடாது என்று கூறிய அரசியல்வாதிகளில் ஒருவர் தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் லைலா நிறுவனம், முன்னாள் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் குடும்பத்தினர்களுக்கு நெருக்கமான நிறுவனம் என்றும் அவர் கூறியிருந்தார்.
வேல்முருகனின் இந்த தகவலை மறுத்துள்ள லைகா நிறுவனம், தனது நிறுவனத்தின் மீது பொய்யான தகவலை கூறியதற்கு வேல்முருகன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இதனால் நிறுவனத்திற்கு ஏற்பட்ட பொருளாதார இழப்புக்கு ஈடாக ரூ.10 கோடி அளிக்க வேண்டும் என்றும் வேல்முருகனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.