ரஜினி, கமலை அடுத்து லைகாவுடன் கைகோர்க்கும் பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Tuesday,January 30 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள '2.0' படத்தை சுமார் ரூ.450 கோடியில் தயாரித்துள்ள லைகா, நிறுவனம் இந்த படத்தை வரும் ஏப்ரலில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் கமல், ஷங்கர் இணையும் 'இந்தியன் 2' படத்தையும் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் ரஜினி, கமலை அடுத்து மணிரத்னம் அவர்களுடன் கைகோர்க்க லைகா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சிம்பு, விஜய்சேதுபதி, ஜோதிகா, பகத்பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், அரவிந்தசாமி என ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடிக்கவுள்ள படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளார்.

இந்த படத்தை மணிரத்னம் அவர்களின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது லைகா நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் இந்த படமும் பிரமாண்ட படங்களில் ஒன்றாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்காது.

 

More News

பாகிஸ்தானை பந்தாடிய இளம் இந்திய அணிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் வாழ்த்து

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய அரையிறுதி போட்டி நடைபெற்றது.

'தல 59' படத்தின் இயக்குனர் குறித்த மாஸ் தகவல்

இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக தல அஜித் இணைந்த 'விசுவாசம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரியில் தொடங்கவுள்ளது என்பதையும்

ஜீவா-நிக்கி கல்ராணியின் சாதனைக்கு ஏற்பட்ட சோதனை

பிப்ரவரி 9ஆம் தேதி ஜீவா, நிக்கி கல்ராணி உள்பட பலர் நடித்த சுந்தர் சியின் 'கலகலப்பு 2' ரிலீஸ் ஆகவுள்ளது. ஆனால் அதே தேதியில் ஜீவா, நிக்கி கல்ராணி நடித்த இன்னொரு படமான 'கீ' திரைப்படமும் ரிலீஸ் ஆகும்

எமனாக மாறிய எம்.ஆர்.ஐ ஸ்கேன் மிஷின்: வாலிபர் பரிதாப மரணம்

மும்பையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனது உறவினர் ஒருவரை பார்க்க சென்று அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால்

தமன்னா மீது ஷூ வீசிய மாணவர்! காரணம் என்ன?

ஐதராபாத் நகைக்கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட பிரபல நடிகை தமன்னா மீது மாணவர் ஒருவர் ஷூ வீசிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.