பதவியில் இருந்து திடீரென விலகி ரஜினி கட்சியில் சேரும் பிரபலம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் குதிப்பது உறுதியாகிவிட்ட நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் அவருடைய கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது
இந்த நிலையில் ரஜினியின் கட்சியில் சேர பல்வேறு கட்சியில் உள்ள பிரமுகர்கள் தயார் நிலையில் இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்த '2.0' படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் ராஜூ மகாலிங்கம் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், அவர் ரஜினி ஆரம்பிக்கவுள்ள கட்சியில் இணைந்து பணிபுரியவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. அதிகாரபூர்வமாக கட்சியின் பெயர் அறிவிக்கும் முன்னரே ரஜினியின் கட்சியில் சேர பலர் முன்வந்திருப்பது தமிழக அரசியல் உலகில் ஆச்சரியத்தை அளிக்கின்றது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments