சப்டைட்டில் சம்பள பாக்கி விவகாரம்: லைகா நிறுவனம் விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படம். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று படக்குழுவினர்களுக்கு பெருமை பெற்று தந்த நிலையில் இந்த படத்திற்காக சப்டைட்டில் அமைத்து கொடுத்த கலைஞர் ஒருவர் தனக்கு லைகா நிறுவனம் சம்பள பாக்கி வைத்துள்ளதாக சமூக வலைத்தளங்கள் மூலம் குற்றஞ்சாட்டினார். சுமார் ரூ.450 கோடி பட்ஜெட்டில் திரைப்படம் தயாரித்த ஒரு நிறுவனம் ஒரு சிறு தொகையை சம்பளப்பாக்கியாக வைத்திருக்குமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது லைகா நிறுவனம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது
2.0 படத்தின் சப்டைட்டிலை பொருத்தவரையில் ரூ.50 ஆயிரம் என நாங்கள் பட்ஜெட் நிர்ணயம் செய்திருந்தோம். இது மற்ற சப்டைட்டில் பணிபுரிந்தவர்கள் பெறும் நியாயமான தொகைதான். ஆனால் 2.0 படத்திற்கு சப்டைட்டில் செய்தவர் ரூ.2 லட்சம் வரை எங்களிடம் எதிர்பார்த்தார். அதற்கு நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இருப்பினும் சம்பளத்தை பின்னர் பேசிக்கொள்ளலாம் என கூறி அவர் பணிபுரிந்தார்.
சமீபத்தில் அவர் மீடியாவில் தனக்கு லைகா நிறுவனம் சம்பள பாக்கி வைத்திருப்பதாக தவறாக குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.1 லட்சம் வரை அவருக்கு சம்பளமாக அளிக்க முன்வந்தோம். இந்த தொகை மார்க்கெட் தொகை கிடையாது என்றாலும் நாங்கள் அதனை அளிக்க முன்வந்தோம். ஆனால் அவர் ரூ.2 லட்சம் என்பதில் உறுதியாக இருந்ததோடு, சமூக வலைத்தளங்கள் மூலம் எங்கள் மீது குற்றஞ்சாட்டினார். இதுவரை நாங்கள் பல திரைப்படங்கள் தயாரித்துள்ளோம். யாருக்கும் எந்த சம்பள பாக்கியும் வைத்ததில்லை. எங்கள் நிறுவனத்தின் நற்பெயரை கெடுக்கவே அவர் ஊடகத்தின் மூலம் புகார் கூறியுள்ளார். இப்போதும் நாங்கள் தர முடிவு செய்திருக்கும் ரூ.1 லட்சத்தை அவர் எப்போது வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம் என்று விளக்கம் அளித்துள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments