லைகா நிறுவனத்தின் அடுத்த பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்.. முக்கிய வேடத்தில் பிரபல நடிகை..!

  • IndiaGlitz, [Monday,May 06 2024]

லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகை முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனம் தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் ’வேட்டையன்’, அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ உள்பட பல பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறது என்று தெரிந்தது.

இந்த நிலையில் லைகா தயாரிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திற்கு 'லாக் டவுன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரது அட்டகாசமான போஸ்டர் வெளியாகி உள்ளதை அடுத்து அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

என்.ஆர்.ரகுநாதன் மற்றும் சித்தார்த் விபின் இசையில், சக்திவேல் ஒளிப்பதிவில் , சாபு ஜோசப் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஏஆர் ஜீவா என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அட்டகாசமாக இருப்பதை அடுத்து இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ’பைசன்’ என்ற படத்தில் அனுபமா பரமேஸ்வரன் தான் நாயகி என்று இன்று காலை அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அவர் நடித்து வரும் இன்னொரு படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.