லைகா நிறுவனத்தின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,February 28 2019]

கோலிவுட் திரையுலகில் ரஜினி, கமல் நடிக்கும் பெரிய பட்ஜெட் படங்கள் முதல், அறிமுக நட்சத்திரங்கள் பணிபுரியும் சின்ன பட்ஜெட் படங்கள் வரை தயாரித்துவரும் நிறுவனம் லைகா. இந்நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு ''பன்னிக்குட்டி'' என்னும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை அனுசரண் முருகையா இயக்குகிறார்.

கருணாகரன், யோகிபாபு, சிங்கம் புலி, திண்டுக்கல் லியோனி, T.P கஜேந்திரன், லக்ஷ்மி ப்ரியா, ராமர் , 'பழைய ஜோக்' தங்கதுரை உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் 'K' என்கிற கிருஷ்ணகுமார் இசையமைக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ஆண்டவன் கட்டளை, 49-0, கிருமி ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சதிஷ் முருகன் ஒளிப்பதிவில் N .R சுகுமாரன் கலை இயக்கத்தில் , M.அனுசரண் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது.