லைகா நிறுவனத்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனம் தயாரித்த ‘டான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நூறு கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி செப்டம்பர் 30-ஆம் தேதி இந்நிறுவனத்தின் பிரமாண்டமான திரைப்படமான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்த ’பன்னிகுட்டி’ என்ற திரைப்படம் ஜூலை 8ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காக்கா முட்டை திரைப்படத்தின் இயக்குனர் மணிகண்டன் கதை எழுத அவருடைய உதவியாளரான அனுசரண் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே கதிர் நடித்த ‘கிருமி’ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பதும், சமீபத்தில் வெளியான ‘சுழல்’ வெப்தொடரின் இயக்குனர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யோகி பாபு மற்றும் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ’பன்னிகுட்டி’ திரைப்படத்தில் விஜய் டிவி ராமர், சிங்கம்புலி, உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கே என்பவர் இசையமைத்துள்ளார்.
She's coming ?? to meet you all. #PanniKutty ?? releasing at screens near you on July 8th ??️
— Lyca Productions (@LycaProductions) June 24, 2022
✨ @iYogiBabu #Karunakaran #Ramar @thangadurai123 | ?? @AnucharanM | ?? @K_RiverRecords | ?? @supertalkies @sameerbr | ?? @onlynikil | ?????? @KannadasanDKD pic.twitter.com/x0iV1eSKKV
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com