லைகா நிறுவனத்தின் புதிய திரைப்படம்: ஹீரோ மற்றும் 2 ஹீரோயின்கள் யார் யார்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் பல பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறது என்று தெரிந்தது. குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன் 2' மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'லால் சலாம்' ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. அது மட்டும் இன்றி அஜீத் நடிக்க இருக்கும் அடுத்த படத்தையும் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகயிருக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு சற்று முன் வெளிவந்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு 'தீரா காதல்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஜெய் நாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவிதா ஆகிய இரண்டு ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். இந்த படத்தை ரோஹின் வெங்கடேசன் என்பவர் இயக்கவிருக்கிறார் இவர் ஏற்கனவே 'அதே கண்கள்' உள்ளிட்ட சில படங்ககளை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சித்து குமார் இசையில், ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் இந்த படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் இந்த ஆண்டு இறுதியில் இந்த படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Get ready for a tale of "Everlasting Love" 💖 Presenting the 1st look of #TheeraKaadhal 💖🫰🏻
— Lyca Productions (@LycaProductions) March 24, 2023
Directed By @rohinv_v 🎬
Starring @Actor_Jai @aishu_dil @SshivadaOffcl @VriddhiVishal 🌟
DOP @NRAVIVARMAN 🎥
Music @Music_Siddhu 🎶
Editor @editor_prasanna ✂️🎞️
Art @ramu_thangaraj 🛠️ pic.twitter.com/gAtiBuU0A4
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments