'பொன்னியின் செல்வன் 2' வசூல் இத்தனை கோடியா? படக்குழுவினர்களின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,May 02 2023]

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் கடந்த வெள்ளி அன்று வெளியானது என்பதும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாசிட்டிவ் விமர்சனம் காரணமாக திரையரங்குகளில் குடும்ப ஆடியன்ஸ்கள் குவிந்து வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியானது.

மேலும் இந்த படம் ரிலீஸ் ஆன இரண்டு நாட்களில் அதாவது வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நான்கு விடுமுறை நாட்களில் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என படக்குழுவினர் தங்களது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் 200 கோடியை தாண்டி வசூல் செய்து பட்டையை கிளப்பி வரும் ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் முதல் பாகத்தின் வசூலை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ’பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பதும் இந்த படம் வசூலில் சாதனை செய்த நிலையில் இரண்டாம் பாகம் இந்த சாதனையை முறியடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காலத்தால் அழிக்க முடியாத காவிய நாவலான கல்வியின் பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக உருவாகியது மட்டுமின்றி அந்த படம் அனைத்து தரப்பிற்கும் பிடிக்கும் வகையில் எடுத்த மணிரத்னம் அவர்களுக்கும் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்த சுபாஷ்கரன் அவர்களுக்கும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.