லைகாவின் அடுத்த படத்தில் த்ரிஷா! டைட்டில் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,April 19 2019]

நடிகை த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான விஜய்சேதுபதியின் '96' மற்றும் இந்த ஆண்டு வெளியான ரஜினியின் 'பேட்ட' ஆகிய திரைப்படம் நல்ல வெற்றியை பெற்ற நிலையில் தற்போது அவர் லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். 'ராங்கி' என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

'எங்கேயும் எப்போதும்', 'இவன் வேற மாதிரி' போன்ற படங்களை இயக்கிய எம்.சரவணன் இந்த படத்தை இயக்கவுள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் த்ரிஷா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் திரைக்கதை எழுதுகிறார்.

'எங்கேயும் எப்போதும்', 'இவன் வேற மாதிரி' போன்ற படங்களுக்கு இசையமைத்த சத்யாவின் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு சுபார்க் படத்தொகுப்பாளராக பணிபுரியவுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.
 

More News

அரசியலுக்கு வர்ற எல்லா தகுதியும் உன்கிட்ட இருக்குது: 'அயோக்யா' டிரைலர் விமர்சனம்

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'அயோக்யா' திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. 'ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான்'

இதுவும் ஒரு பயிற்சி! மாணவிகள் மேலாடையை கழட்ட சொன்ன ஆசிரியர்! 

நாடகப் பள்ளி ஆசிரியர் ஒருவர்,  மாணவ மாணவிகளை, மேலாடையை கழட்ட சொல்லியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலுக்கு வருவது எப்போது? ரஜினிகாந்த் பதில்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி் வரும் 'தர்பார்' திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கும் நிலையில்

சாமியா? ஆவியா? எதை போட்டாலும் கல்லாக மாற்றும் அதிசய கிணறு! 

செயற்கையாக பல்வேறு தொழில்நுட்பங்களையும், நவீன வளர்ச்சிகளையும்,  மனிதன் உருவாக்கினாலும்,

விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் கருணாகரன்: எதற்கு தெரியுமா?

கடந்த சில மாதங்களாகவே காமெடி நடிகர் கருணாகரனுக்கு விஜய் ரசிகர்களுக்கும் இடையே டுவிட்டரில் கருத்து மோதல்கள் ஏற்பட்டிருந்து பலர் அறிந்ததே.