லைகாவின் அடுத்த படத்தில் த்ரிஷா! டைட்டில் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,April 19 2019]

நடிகை த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான விஜய்சேதுபதியின் '96' மற்றும் இந்த ஆண்டு வெளியான ரஜினியின் 'பேட்ட' ஆகிய திரைப்படம் நல்ல வெற்றியை பெற்ற நிலையில் தற்போது அவர் லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். 'ராங்கி' என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

'எங்கேயும் எப்போதும்', 'இவன் வேற மாதிரி' போன்ற படங்களை இயக்கிய எம்.சரவணன் இந்த படத்தை இயக்கவுள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் த்ரிஷா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் திரைக்கதை எழுதுகிறார்.

'எங்கேயும் எப்போதும்', 'இவன் வேற மாதிரி' போன்ற படங்களுக்கு இசையமைத்த சத்யாவின் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு சுபார்க் படத்தொகுப்பாளராக பணிபுரியவுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.