சிம்பு பட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த லைகா
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த 'கத்தி' படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்த லைகா நிறுவனம் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கும் 'எந்திரன் 2' படத்தை ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது. மேலும் ஜெயம் ரவியின் படம், பொன்ராம் இயக்கும் படம், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் என லைகா நிறுவனம் தயாரிக்கும் படங்களில் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. கமல்ஹாசனின் கனவுப்படமான 'மருதநாயகம்' படத்தையும் இந்நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ரிலீஸுக்கு தயாராகவிருக்கும் ஒருசில படங்களை லைகா நிறுவனம் வெளியிடவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இவற்றில் ஒன்று கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள 'அச்சம் என்பது மடமையடா' திரைபடத்தின் பெயரும் வதந்திகளில் அடிபடுகிறது.
ஆனால் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள லைகா நிறுவனம், வெற்றிமாறன் இயக்கியுள்ள 'விசாரணை' படம் தவிர வேறு எந்த படத்தையும் தங்கள் நிறுவனம் வெளியிடவில்லை என்று அறிவித்துள்ளது. இதனால் சிம்பு படம் வெளியீடு குறித்த வதந்திகளுக்கு லைகா நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout