'பொன்னியின் செல்வன் 2' படத்திற்கு முன்பே ரிலீஸ் ஆகும் லைகாவின் இன்னொரு படம்; அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனம் தயாரித்த ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே லைகா நிறுவனத்தின் இன்னொரு திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ் திரையுலகின் இளைய தலைமுறை நடிகர்களின் ஒருவரான அருள் நிதி முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படம் ’திருவின் குரல்’. இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒருபுறமும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் இன்னொரு புறமும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏப்ரல் 14ஆம் தேதி ‘சாகுந்தலம்’, ‘ருத்ரன்’, ‘தமிழரசன்’ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகயிருக்கும் நிலையில் தற்போது ’திருவின் குரல்’ படமும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஹரிஷ் பிரபு இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் உருவாகும் இந்த படத்தின் நாயகியாக ஆத்மிகா நடித்து வருகிறார்.
The Awaited Trailer of #ThiruvinKural 📢 ⚕️is Releasing TODAY at 3PM!
— Lyca Productions (@LycaProductions) April 3, 2023
In cinemas from 14th April.
🌟 @arulnithitamil @offBharathiraja & @im_aathmika
🎬 @harishprabhu_ns
🎶 @SamCSmusic
🎥 @sintopoduthas
✂🎞 @thecutsmaker
💿 @thinkmusicindia
🤝 @gkmtamilkumaran pic.twitter.com/fPYtLjpLqv
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com