close
Choose your channels

லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான அறிவிப்பு.. மீண்டும் அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம்..!

Thursday, March 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லைகா நிறுவனம் இன்று காலை பிரமாண்டமான அறிவிப்பை வெளியிட போகிறது என்று செய்திகள் வெளியான நிலையில் அஜித் நடிக்க இருக்கும் ’ஏகே 62’ படத்தின் அறிவிப்புதான் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 170 வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் சற்று முன் அறிவித்துள்ளது. இதுகுறித்து அறிவிப்பின் கூறப்பட்டுள்ளதாவது.

லைகா குழுமம் தலைவர் சுபாஸ்கரன் அவர்கள் பிறந்த நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ’தலைவர் 170’ திரைப்படத்தின் அறிவிப்பை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். லைகா புரொடக்ஷன் நிறுவனத்தின் மற்றுமொரு பெருமைமிகு தருணம் இது. தலைமுறைகள் கடந்து திரை ரசிகர்களை மகிழ்வித்து மகிழ்கின்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ’தலைவர் 170’ திரைப்படத்தின் பணிகள் இனிதே ஆரம்பம்.

இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் இசைவழி நம் இதயங்களை இணைக்கும் திரு அனிருத் இசையில் பிரம்மாண்டமான திரைப்படங்களை படைத்தளிக்கும் திரு சுபாஷ்கரன் தயாரிப்பில் லைகா புரொடக்சன் தலைமை பொறுப்பாளர் திரு தமிழ் குமரன் அவர்களின் தலைமையில் ’தலைவர் 170’ படம் 2024 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

சூப்பர் ஸ்டார் அவர்களின் ஒவ்வொரு திரைப்பட வெளியிடும் ரசிகர்கள் கொண்டாடும் திருவிழா தான். அவருடன் மீண்டும் இணைவதில் லைகா புரொடக்சன் பெருமிதம் கொள்கிறது. அனைவரின் வாழ்த்துக்களோடு 2024 மாபெரும் கொண்டாட்டத்திற்கு தயாராவோம், நன்றி!!!

இவ்வாறு லைகா நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment