லைகா நிறுவனத்தின் அடுத்த படத்தில் இந்த பிரபலம் தான் ஹீரோவா?

லைகா நிறுவனத்தின் அடுத்த திரைப்படத்தில் பிரபல கன்னட நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

’பொன்னியின் செல்வன்’ என்ற மாபெரும் வெற்றி படம் உள்பட பல திரைப்படங்களை தயாரித்த தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் லைகா நிறுவனம். இந்நிறுவனம் தற்போது ’பொன்னியின் செல்வன் 2’ ரஜினியின் ’லால் சலாம்’ அஜித்தின் ’ஏகே 62 உள்பட பல பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் அடுத்த படத்தில் பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் நாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சமீபத்தில் கிச்சா சுதீப்பை இயக்குனர் வெங்கட்பிரபு சந்தித்து கதை கூறி இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் கிச்சா சுதீப் மற்றும் வெங்கட் பிரபு இணையும் படத்தை லைகா தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கிச்சா சுதீப் நடித்த ’விக்ராந்த் ரோனா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது ’கப்ஸா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும், பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.