லைகா நிறுவனத்தின் அடுத்த படம் இதுதான்: மாஸ் போஸ்டர் ரிலீஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனம் தனது அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
’பொன்னியின் செல்வன்’ உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்த லைகா நிறுவனம் தற்போது வடிவேலு நடித்து வரும் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ மற்றும் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் ‘சந்திரமுகி 2’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. மேலும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கும் ’லால் சலாம்’ என்ற படத்தையும் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பதும், அதுமட்டுமின்றி ரஜினியின் இன்னொரு படத்தையும் லைகா தயாரிக்க இருப்பதாகவும் அந்த படத்தை சிபிச்சக்கரவர்த்தி இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் லைகா நிறுவனம் தயாரிக்கும் இன்னொரு படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது. அதர்வா மற்றும் ராஜ்கிரண் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தை சற்குணம் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு லோகநாதன் ஒளிப்பதிவும் ராஜா படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு ‘பட்டத்து அரசன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கனல்கண்ணன் சண்டை பயிற்சியில் விவேக் மற்றும் அமுதவன் பாடல் வரிகளில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
We are extremely happy to unveil ✨ the Title & First Look of #PattathuArasan ??
— Lyca Productions (@LycaProductions) November 10, 2022
Starring @Atharvaamurali #Rajkiran @AshikaRanganath @realradikaa ✨
Directed by @SarkunamDir ??
Music by @GhibranOfficial ??
DOP #Loganathan ??
Editor @editor_raja ✂️@gkmtamilkumaran #Subaskaran pic.twitter.com/afLQ6osQ7C
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments