மலையாளத்தில் பிரம்மாண்டமாக களமிறங்கும் சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவின் முன்னணி பிரம்மாண்டமான படத் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் பட தயாரிப்பில் ஈடுபட தொடங்கி வெற்றிகரமான பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் போது மலையாள திரையுலகில் இதுவரை மேற்கொள்ளப்படாத பிரம்மாண்டமான பொருட்செலவில் 'லூசிபர் 2 எம்புரான்' எனும் திரைப்படத்தை தயாரிக்கிறது. இதன் மூலம் மலையாள திரையுலகில் பிரம்மாண்டமான தயாரிப்புடன் லைக்கா நிறுவனம் களமிறங்குகிறது.
இந்நிறுவனம் தற்போது இயக்குனர் ஷங்கர் - 'உலகநாயகன்' கமல்ஹாசன் கூட்டணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'இந்தியன் 2' படத்தை தயாரித்து வருகிறது. மேலும் சூப்பர் ஸ்டாரின் வாரிசும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'லால் சலாம்' எனும் திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து 'ஜெய்பீம்' புகழ் இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதையின் நாயகனாக நடிக்கவிருக்கும் 'தலைவர் 170' எனும் திரைப்படத்தையும் தயாரிக்கிறது. இத்துடன் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகும் 'விடாமுயற்சி' எனும் திரைப்படத்தையும் தயாரிக்கிறது. அதனுடன் தளபதி விஜய்யின் வாரிசும், அறிமுக இயக்குநருமான ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தையும் தயாரிக்கிறது.
தமிழில் மட்டுமல்லாமல் இந்தியில் முன்னணி நட்சத்திர நடிகர் அக்ஷய் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தையும் தயாரிக்கிறது.
தொடர்ந்து பிரம்மாண்டமான படைப்புகளை தயாரித்து வழங்கி இந்திய சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் லைக்கா புரொடக்ஷன்ஸ் தற்போது மலையாளத்தில் 'லூசிபர் 2 எம்புரான்' எனும் படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.
மேலும் லைக்கா புரொடக்ஷன்ஸ் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் ஜி. கே. எம். தமிழ் குமரன் இந்த படைப்புகளை தொடர்ந்து வேறு சில முன்னணி நட்சத்திர நடிகர்களிடம் அடுத்தடுத்து பிரம்மாண்டமான படைப்புகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments