'இந்தியன் 2' விபத்து: கமல் கடிதத்திற்கு லைகா பதில்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நடந்த ’இந்தியன் 2’ பட விபத்து குறித்து அந்த படத்தின் நாயகன் கமல்ஹாசன், தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த கடிதத்தில் ‘இனிவரும் காலங்களில் படப்பிடிப்பு தளங்களில் பாதுகாப்புக்கான அனைத்து உத்தரவாதங்களையும், வழிகாட்டுதல்களையும் நீங்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும், லைகா எடுக்கப்போகும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள், அதை விடாமல் இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக கடைப்பிடிப்பதும் படப்பிடிப்புக் குழுவினரின் இழந்த தன்னம்பிக்கையை மீட்டெடுத்து மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க வைக்கும் என்று கமல் தெரிவித்திருந்தார்.
கமல்ஹாசனின் இந்த கடிதத்திற்கு தற்போது லைகா நிறுவனம் பதில் அளித்துள்ளது. அந்த பதில் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: உங்களின் கடிதத்திற்கு முன்பாகவே விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துவிட்டோம். இந்தியன் 2 படப்பிடிப்பின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளில் லைகா நிறுவனம் எந்த குறையும் வைக்கவில்லை.
லைகா நிறுவனம் உலக தரத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கொண்ட நிறுவனம். படப்பிடிப்பு தளத்தில் இருந்த உங்களுக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் பொறுப்பு இருக்கிறது. உங்களது மற்றும் இயக்குநரின் மேற்பார்வையிலும், கட்டுப்பாட்டிலும்தான் முழுப்படப்பிடிப்பும் இருந்தது என்பதை நாங்கள் நினைவூட்டுகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளது.
‘இந்தியன் 2’ பட விபத்து குறித்து கமல் எழுதிய கடிதமும் அதற்கு லைகா எழுதிய பதில் கடிதமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
— Lyca Productions (@LycaProductions) February 26, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com