கமலுடன் இணைந்தது ரஜினி பட மெகா நிறுவனம்
- IndiaGlitz, [Thursday,February 04 2016]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தை ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வரும் மெகா நிறுவனம் லைகா புரடொக்ஷன்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிறுவனம் '2.0' படத்தை தவிர ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தை தயாரிப்பதோடு, 'விசாரணை' உள்பட ஒருசில படங்களின் ரிலீஸ் உரிமையையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் ரஜினியை அடுத்து இந்த நிறுவனம் கமல்ஹாசனுடன் கைகோர்த்துள்ளது. லைகா மற்றும் கமல்ஹாசன் இணைந்து ஒரு படம் தயாரிக்கும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
கமல்ஹாசனின் கனவுப்படமான 'மருதநாயகம்' படம் பட்ஜெட் காரணமாக பாதியில் நிற்கிறது. அந்த படத்தை மீண்டும் தொடர்வது குறித்து பிரபல நிறுவனத்துடன் பேசிவருவதாக கமல் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளதால் மீண்டும் 'மருதநாயகம்' உயிர்பெற உள்ளதாக கூறப்படுகிறது.
Lyca is proud to associate with Ulaganayagan Kamalhassan avargal. pic.twitter.com/D4zSoBqahM
— raju.mahalingam (@rajumahalingam) February 4, 2016