'ஏகே 62' படத்திற்கு முன்பே அஜித்துடன் இணைந்த லைகா!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடிக்க இருக்கும் 62வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இதற்காக அஜித்துக்கு அந்நிறுவனம் 105 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் நிலையில் அனிருத் இசையமைக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் அஜித்தின் 62வது படத்தை தயாரிக்கும் முன்பே அஜித்தின் 61வது படமான ’துணிவு’ படத்தின் வெளிநாட்டு உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. லைக்கா மற்றும் டெண்ட்கொட்டா ஆகிய இரண்டு நிறுவனங்களும் ’துணிவு’ படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்ய உரிமை பெற்றிருப்பதாகவும், இதனை அடுத்து மிக அதிக திரையரங்குகளில் அனைத்து நாடுகளிலும் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
’துணிவு’ திரைப்படம் வெளியாகும் அதே நாளில் ’வாரிசு’ திரைப்படம் வெளியாக உள்ளது. ’வாரிசு’ படத்திற்கு உலகம் முழுவதும் பல திரையரங்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ’துணிவு’ படத்தை லைக்கா நிறுவனம் வெளியிட உள்ளதால் ‘வாரிசு’ படத்திற்கு இணையாக ’துணிவு’ படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com