'சந்திரமுகி 2' படத்தின் சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட லைகா.. வீடியோ வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி. வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள ’சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில் நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஸ்வாகதாஞ்சலி வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில் தற்போது இரண்டாவது பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பை லைகா நிறுவனம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது.
கிராமப்புற பின்னணியில் ராகவா லாரன்ஸ் செம டான்ஸ் பாடலாக உருவாகியுள்ள இந்த பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கார் நாயகன் எம்எம் கீரவாணி கம்போஸ் செய்த இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். எஸ்பிபி சரண் மற்றும் ஹரிகா நாராயணன் ஆகியோர் பாடிய இந்த பாடலுக்கு குக் வித் கோமாளி பிரபலம் பாபா பாஸ்கர் நடன இயக்குனராக பணிபுரிந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடல் குறித்த கிளிம்ப்ஸ் வீடியோவை லைகா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தில் சந்திரமுகி கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில், ஆர் ஜி ராஜசேகர் ஒளிப்பதிவில், தோட்டா தரணி கலை இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
A classy dance number set in a village backdrop - 'Moruniye'. 🕺🏻🌾 Get ready for more glimpses of @offl_Lawrence's dance moves in this vibrant lyrical music video. 🥁😇🎼
— Lyca Productions (@LycaProductions) August 21, 2023
The 2nd single 'Moruniye' from #Chandramukhi2 🗝️ releasing tomorrow at 5pm! 🕔🕺🏻✨
A @mmkeeravaani musical… pic.twitter.com/QkkFcfnZ0d
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments