லைகா - ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரூ.350 கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் '2.0' என்ற படத்தை தயாரித்து வருகிறது. இந்தியாவின் மிக அதிக பட்ஜெட் படமான இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் லைகா நிறுவனம் மேலும் சில தமிழ் படங்களை தயாரிக்க முன்வந்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
அந்த வகையில் லைகா நிறுவனம் தயாரிக்கும் இன்னொரு படத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் 'கயல்' ஆனந்தி நடித்து வருகின்றனர் என்ற செய்தி அனைவரும் அறிந்ததே. கடந்த டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்த படத்திற்கு 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' என்ற டைட்டில் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் இந்த படத்தின் அதிகாரபூர்வ டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வரும் பொங்கல் தினத்தில் அறிவிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பொங்கல் தினத்தில் பல முன்னணி நடிகர்கள் தாங்கள் நடித்த படங்கள் ரிலீஸ், ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ், டிரைலர் ரிலீஸ், டீசர் ரிலீஸ் என அறிவித்திருக்கும் நிலையில் ஜி.வி.பிரகாஷூம் தனது ரசிகர்கள் பொங்கல் ட்ரீட் தரவுள்ளார் என்பது குறிப்பிடத்தகது. ஜி.வி.பிரகாஷின் முதல் படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இந்த படத்தை இயக்கி வருகிறார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com