ரூ.2 கோடியை அடுத்து மீண்டும் ரூ.1 கோடி: லைகாவின் தாராளமான நிதியுதவி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை அடுத்து அரசு எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பிரபல தயாரிப்பு நிறுவனம் லைகாவின் சேர்மன் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் சார்பில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் கொரோனா நிவாரண பணிக்காக ரூபாய் 2 கோடிக்கான காசோலையை லைக்கா நிறுவனத்தின் நிர்வாகிகள் திரு.GKM தமிழ்குமரன் மற்றும் திரு. நிருதன், திரு. கெளரவ் ஆகியோர் அளித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது தமிழக அரசை அடுத்து பெப்சி தொழிலாளர்களுக்கும் லைகா நிறுவனம் ரூபாய் ஒரு கோடி நிவாரண நிதி அளித்து உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த சில வாரங்களாக படப்பிடிப்பு இல்லாமல் பெப்சி தொழிலாளர்கள் மிகுந்த கஷ்டத்தில் இருந்தனர். இதனை கருத்தில் கொண்டு லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் அல்லிராஜா அவர்கள் சார்பில் ரூபாய் ஒரு கோடிக்கான காசோலை பெப்ஸி தலைவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி அவர்களிடம் வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை லைகாவின் நிர்வாகிகளான தமிழ்குமரன், நிருதன், கௌரவ் ஆகியோர் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ஒப்படைத்தனர்.
இந்த ஒரு கோடி ரூபாய் விரைவில் பெப்சி தொழிலாளர்கள் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Today, Our Chairman Mr. Allirajah Subaskaran donated Rs.1 crore for Film Employees Federation of South India(FEFSI) towards Covid-19 relief fund. Mr. GKM Tamilkumaran, Mr. Niruthan and Mr. Gaurav handed over the cheque to #FEFSI president Mr.R.K. Selvamani pic.twitter.com/URlRPxLSjK
— Lyca Productions (@LycaProductions) June 21, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com