'வேட்டையன்' பார்க்க செல்லும் அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. லைகாவின் மாஸ் திட்டம்..!

  • IndiaGlitz, [Friday,October 04 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்’ படம் பார்க்க செல்லும் அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் லைக்கா நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்’ திரைப்படம் வரும் பத்தாம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் முன்பதிவு தொடங்கும் என்பதால் இந்த படத்தின் முன்பதிவு வசூல் சாதனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் 'வேட்டையன்’ படத்தை பிரமாண்டமாக லைகா நிறுவனம் தயாரித்து உள்ள நிலையில் இதே நிறுவனம் தான் அஜித் நடித்துள்ள ’விடாமுயற்சி’ படத்தையும் தயாரித்துள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 'வேட்டையன்’ படத்தின் இடைவேளையின் போது 'விடாமுயற்சி’ படத்தின் டீசரை வெளியிட லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் இதனால் 'வேட்டையன்’ படம் பார்க்கும் படம் பார்க்க வரும் அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் உண்மையில் அஜித் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.