ரொம்ப நாளா அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த அப்டேட்.. சூப்பர் தகவலை சொன்ன லைகா..!

  • IndiaGlitz, [Monday,July 22 2024]

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி வரும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக அஜர்பைஜான் நாட்டில் நடந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தான் முடியும் என்று அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த நிலையில் லைகா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் அஜர்பைஜான் நாட்டில் நடந்து வந்த ’விடாமுயற்சி’ படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக கூறியதோடு இதுகுறித்த வீடியோக்களையும் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் ’விடாமுயற்சி’ படக்குழுவினர் சென்னை திரும்ப உள்ளதாகவும், ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஒரு சில நாட்கள் மட்டும் இந்த படத்தின் மீதி படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் அதன் பிறகு போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே திட்டமிட்டபடி இந்த படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்திருக்கும் ’விடாமுயற்சி’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.

 

More News

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் 'நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்' .. நகைச்சுவை வெப் சீரிஸ்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அடுத்ததாக மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் மலையாள ஒரிஜினல் சீரிஸான "நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்" சீரிஸினை ஸ்ட்ரீம் செய்ய துவங்கியுள்ளது.

சுயசக்தி விருதுகள் 2024.. வீட்டில் இருந்து தொழில் செய்யும் பெண்களுக்கான கெளரவம்..!

வீட்டிலிருந்து தொழில் செய்யும் பெண்களை கௌரவிக்கும் வகையில் சுய சக்தி விருது அளிக்கப்படும் நிலையில் இந்த விருதுக்கு விண்ணப்பம் தரலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரசாந்தின் 'அந்தகன்' படத்திற்கு உதவும் தளபதி விஜய்.. சர்ப்ரைஸ் அறிவிப்பு..!

பிரசாந்த் நடித்த 'அந்தகன்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக தளபதி விஜய் உதவி செய்வது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காஸ்ட்யூம் செலவு ரொம்ப மிச்சம்.. 'ஜெயிலர்' மருமகளின் கிளாமர் போட்டோஷூட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த நடிகை உச்சகட்ட கிளாமர் காஸ்டியூம் உடன் கூடிய போட்டோஷூட் புகைப்படங்களை

சூப்பர் சிங்கர் ப்ரியா ஜெர்சன் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை.. க்யூட் புகைப்படங்கள்..!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலமான ப்ரியா ஜெர்சன் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ள நிலையில் அது குறித்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.