முதலமைச்சர் நிவாரண நிதிக்கு லைகா கொடுத்த மிகப்பெரிய தொகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வரும் நிலையில் தமிழக மக்களை கொரோனாவில் காப்பாற்ற அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசுக்கு கைகொடுக்கும் வகையில் திரையுலகினர் தொழிலதிபர்கள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் தாராளமாக நிதி உதவி செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக திரையுலகினர் பலர் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நிதியுதவி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி லைகா புரொடக்சன்ஸ் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் சார்பில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து கொரோனா நிவாரண பணிக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் 2 கோடி காசோலையை வழங்கப்பட்டது.
லைகா நிறுவனத்தின் நிர்வாகிகள் திரு.GKM தமிழ்குமரன் மற்றும் திரு. நிருதன், திரு. கெளரவ் ஆகியோர் இந்த காசோலையை முதலமைச்சரிடம் நேரில் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com