பான் இந்தியா திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற லைகா.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
- IndiaGlitz, [Wednesday,March 08 2023]
மார்ச் 17ஆம் தேதி வெளியாக இருக்கும் பான் இந்தியா திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் பெற்றிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தற்போது அஜித் நடிக்க இருக்கும் ’ஏகே 62’, ’பொன்னியின் செல்வன் 2’ உள்பட பல பெரிய பட்ஜெட் படங்களையும் ஒரு சில சின்ன பட்ஜெட் படங்களையும் தயாரித்து வருகிறது என்பது தெரிந்ததே. மேலும் பல திரைப்படங்களை இந்நிறுவனம் ரிலீஸ் செய்து வருகிறது என்பதும் சமீபத்தில் கூட அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை பெற்று பிரமாண்டமாக உலகின் பல நாடுகளில் ரிலீஸ் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மார்ச் 17ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் பான் இந்தியா திரைப்படமான ’கப்ஜா’ என்ற திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் பெற்று இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உபேந்திரா, கிச்சா சுதீப், ஸ்ரேயா சரண், முரளி ஷர்மா, சுதா, உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படம் 1945 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய கதையம்சம் கொண்டது. தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, ஒரியா என ஏழு இந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் இந்த படத்தை ஸ்ரீ சித்தேஸ்வரா எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படுகிறார். அவருடைய மகன் தவிர்க்கமுடியாத காரணங்களால் மாஃபியா கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் பிரம்மாண்டமான படைப்பு தான் ‘கப்ஜா’ என்பது குறிப்பிடத்தக்கது.
We are extremely elated to announce @LycaProductions #Subaskaran will proudly present #KABZAA across TAMIL NADU ✨
— Lyca Productions (@LycaProductions) March 7, 2023
Releasing in theatres on MARCH 17 📽️@NimmaShivanna @nimmaupendra @KicchaSudeep @rchandru_movies @Alankar_Pandian @KabzaaM @gkmtamilkumaran #KabzaaTNReleaseByLyca pic.twitter.com/xNd6MwtKsP