close
Choose your channels

'ஆர்.ஆர்.ஆர்' ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்: எத்தனை கோடி தெரியுமா?

Wednesday, February 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எஸ்எஸ் ராஜமெளலி இயக்கிய ’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் வசூலை குவித்தது என்பதும் இந்த இரண்டு படங்களால் இந்திய திரையுலகமே தலைநிமிர்ந்து நின்றது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலியின் அடுத்த திரைப்படமான ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சுதந்திரப்போராட்ட கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் தேஜா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து இருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படம் அக்டோபர் 13ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சற்றுமுன் வெளியான தகவலின்படி இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மட்டும் சுமார் 43 ரூபாய் கொடுத்து லைகா நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

பாகுபலி மற்றும் பாகுபலி 2 படத்தின் மிகப்பெரிய வெற்றியே இந்த படத்தின் மிகப்பெரிய வியாபாரத்துக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment