லைகாவிடம் சென்ற அருண் விஜய்யின் அடுத்த படம்.. டைட்டிலும் மாற்றமா?

  • IndiaGlitz, [Monday,April 03 2023]

அருண் விஜய் நடித்துக் கொண்டிருந்த திரைப்படம் ஒன்றின் ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளதை அடுத்து இந்த படத்தின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

அருண் விஜய் நடிப்பில் ஏ எல் விஜய் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் ’அச்சம் என்பது இல்லையே’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக லண்டனில் நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் திரையரங்கம் ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது . மேலும் இந்த படம் ’மிஷன்’ என்று அழைக்கப்படும் என்றும் சப்டைட்டில் ’சாப்டர் 1 அச்சம் என்பது இல்லையே’ என்ற டைட்டில் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது

அருண் விஜய்யின் மிக பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் லைகாவிடம் சென்றதையடுத்து சிறப்பாக விளம்பரம் செய்யப்பட்டு வெற்றி படமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அருண் விஜய் ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ள இந்த படத்தில் நிமிஷா சஜயன், அலெக்சாண்டர் கேஸி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் அருண் விஜய் மற்றும் ஏ எல் விஜய் இருவருக்குமே இன்னொரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.