தர்பார்' தோல்விப்படமா? சமூக வலைத்தளத்தில் பரவும் வதந்தி!
- IndiaGlitz, [Friday,January 31 2020]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்’ திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக வெளியான நிலையில் இந்த படம் நான்கே ரூபாய் 150 கோடி ரூபாய் வசூல் செய்ததாக லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தது அதன் பின்னர் இந்த ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் திடீரென நேற்று ஒரு சில விநியோகிஸ்தர்கள் ரஜினியின் வீட்டு முன் கூடி, ‘தர்பார்’ படம் தங்களுக்கு நஷ்டத்தை கொடுத்ததாகவும் ரஜினிகாந்த் தங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் தெரிந்தது. இந்த நிலையில் 'தர்பார்’ திரைப்படம் வெற்றிப்படம் என்றும் இந்த படத்தின் தமிழ்ப்பதிப்பு மட்டும் ரூ.250 கோடி வசூல் செய்ததாகவும் லைகா நிறுவனத்தின் பெயரில் ஒரு போலி சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் உண்மையில் லைகா நிறுவனம் ‘தர்பார்’ படத்தின் வசூல் குறித்து கடந்த சில நாட்களாக எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பதே உண்மை!
Dont Believe any Rumours#Darbar is a Profitable Venture for every distributors in Tamilnadu
— M.K.Alagiri (@writter_vambu) January 31, 2020
Eventually #Darbar has Crossed
250 CRS in #TamilVersion alone
.#Darbar Roars as a Lion in BO#DarbarWWBlockbuster
???????? pic.twitter.com/53HDxEoEJb