'தலைவர் 170' படத்தில் இணைந்த பிரபல ஹீரோ.. லைகா அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் ’தலைவர் 170’. இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் நேற்று இந்த படத்தில் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ரானா டகுபாய் இணைந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அடுத்ததாக பகத் பாசில், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் நடிக்க இருக்கும் தகவல்கள் இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Welcoming the dapper & supercool talent 😎 Mr. Rana Daggubati ✨ on board for #Thalaivar170🕴🏼#Thalaivar170Team has gotten even more charismatic 🌟 with the addition of the dashing @RanaDaggubati 🎬🤗✌🏻@rajinikanth @tjgnan @anirudhofficial @ManjuWarrier4 @officialdushara… pic.twitter.com/XhnDpm27CH
— Lyca Productions (@LycaProductions) October 3, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments