'பொன்னியின் செல்வன் 2' டிரைலர்: அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட லைகா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்த படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் ரூபாய் 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற ’அகம் நக’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் டிரைலரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
அந்த வகையில் சற்றுமுன் மார்ச் 29ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என லைகா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் அட்டகாசமான போஸ்டரை வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
Fire in their eyes. Love in their hearts. Blood on their swords. The Cholas will be back to fight for the throne! #PS2TrailerFromMarch29#PS2 #ManiRatnam @arrahman @madrastalkies_ @Tipsofficial @tipsmusicsouth @IMAX @primevideoIN @chiyaan #AishwaryaRaiBachchan#PonniyinSelvan2 pic.twitter.com/iShNmBObDg
— Lyca Productions (@LycaProductions) March 24, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com