'லால்சலாம்' திருவிழா ஆரம்பம்.. லைகா கொடுத்த மாஸ் அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’லால் சலாம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.
இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவான இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் ஒரு சில வாரங்களில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது. ’தேர்த்திருவிழா’ என்ற இந்த பாடல் நிச்சயம் ரசிகர்களை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினியின் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைக்க இருப்பதால் இந்த படத்தின் பாடல்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா, தம்பி ராமையா, செந்தில் உட்பட பலர் நடித்துள்ளனர்.
Let the festivities begin! ☀️🌾✨ The 1st single 'THER THIRUVIZHA' from LAL SALAAM drops tomorrow at 5PM! 🕔
— Lyca Productions (@LycaProductions) December 17, 2023
An @arrahman musical 🎶
Audio on @SonyMusicSouth 📼#LalSalaam 🫡 @rajinikanth @ash_rajinikanth @arrahman @TheVishnuVishal @vikranth_offl @LycaProductions #Subaskaran… pic.twitter.com/90MDibzSt9
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments