வேட்டையன் ராஜா பராக்.. பராக்.. பராக்.. 'சந்திரமுகி 2' சூப்பர் அப்டேட் கொடுத்த லைகா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களாக உருவாகி வருகிறது என்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் இந்த படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் புரமோஷன் பணிகளையும் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்
இந்த நிலையில் சற்றுமுன் லைகா நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற வேட்டையன் என்ற கேரக்டரின் பர்ஸ்ட்லுக் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை காண உள்ளனர்.
மேலும் ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜமார்த்தாண்ட, ராஜ குல திலக, வேட்டையன் ராஜா பராக் பராக் பராக் என லைகா தனது அறிவிப்பில் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தில் சந்திரமுகி கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். பி வாசு இயக்கத்தில், ஆர் ஜி ராஜசேகர் ஒளிப்பதிவில், தோட்டா தரணி கலை இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Rajadhi raja, Raja ghambira, Raja marthanda, Raja kula thilagaa... Vettaiyan Raja paraak paraak paraak!! 🕴️🗝️
— Lyca Productions (@LycaProductions) July 30, 2023
Watch this space at 10AM tomorrow as we unveil the look of our #Vettaiyan 👑
Chandramukhi-2 releasing in Tamil, Hindi, Telugu, Malayalam & Kannada this Ganesh… pic.twitter.com/RZctPR2pTA
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments