'தர்பார்' வசூல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த லைகா!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் கடந்த 9ஆம் தேதி பொங்கல் விருந்தாக ரஜினி ரசிகர்களுக்காக வெளிவந்த நிலையில் இந்த படம் அனைத்து தரப்பினரின் பேராதரவைப் பெற்று ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக திரையரங்கில் ஓடி வருகிறது. இந்த நிலையில் இந்த படம் நான்கு நாட்களில் வசூலான தொகை குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலை தளங்களில் வெளியாகி வந்தன
ரஜினியை பிடிக்காதவர்கள் மிகக்குறைவாக வசூல் செய்ததாகவும், ரஜினி ஆதரவாளர்கள் அதிக வசூல் செய்ததாகவும் வதந்திகளை பரப்பி வந்தனர். இந்த நிலையில் ‘தர்பார்’ வசூல் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக இந்த படத்தின் 4 நாள் வசூல் குறித்த தகவல்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்து உள்ளது
இந்த படம் நான்கு நாட்களில் உலகம் முழுவதும் ரூபாய் 150 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசூல் மற்றும் சாட்டிலைட், டிஜிட்டல் உரிமைகளில் கிடைத்த தொகை ஆகியவைகளை கணக்கில் கொண்டால் இந்த படத்திற்காக முதலீடு செய்த தொகை கிட்டத்தட்ட லைகாவிற்கு திரும்பி விட்டதாகவும் இனி கிடைக்கும் வசூல் தொகை லாபம் என்று கூறப்படுகிறது. நாளை முதல் ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் இந்த படத்தின் வசூல் இன்னும் அபாரமாக இருக்கும் என கருதப்படுகிறது
Here's the Worldwide Box-office collections of #DARBAR
— Lyca Productions (@LycaProductions) January 13, 2020
"Anyone can play the game, but the throne always belongs to the EMPEROR ??"@rajinikanth @ARMurugadoss #Nayanthara @anirudhofficial @santoshsivan @sreekar_prasad #Santhanam @SunielVShetty #DarbarPongal #DarbarBlockbuster pic.twitter.com/f2z0MGlzVv
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com