'லால் சலாம்' ரிலீஸ் தேதியை அறிவித்த லைக்கா.. 2 பிரபலங்களின் படங்களுக்கு சிக்கலா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’லால் சலாம்’ என்ற படத்தின் ரிலீஸ் தேதியை லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் அதே தேதியில் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த படங்களின் ரிலீஸ் தேதி மாற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவான திரைப்படம் ’லால் சலாம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் தற்போது டப்பிங், கிராபிக்ஸ் உள்பட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சற்றுமுன் லைக்கா நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் ’லால் சலாம்’ படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவித்துள்ளது. மேலும் பொங்கல் ரிலீஸ் என்ற வாசகங்களுடன் கூடிய போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ’அயலான்’ மற்றும் சுந்தர் சி இயக்கி நடித்த ’அரண்மனை 4’ ஆகிய திரைப்படங்கள் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தற்போது ’லால் சலாம்’ படத்தின் பொங்கல் ரிலீஸ் அறிவிப்பால் மேற்கண்ட இரண்டு படங்களின் ரிலீஸ் தேதி மாற்றப்படுமா? அல்லது அதே தேதியிலேயே ரிலீஸ் ஆகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
LAL SALAAM to hit 🏏 screens on PONGAL 2024 🌾☀️✨
— Lyca Productions (@LycaProductions) October 1, 2023
🌟 @rajinikanth
🎬 @ash_rajinikanth
🎶 @arrahman
💫 @TheVishnuVishal & @vikranth_offl
🎥 @DOP_VishnuR
⚒️ @RamuThangraj
✂️🎞️ @BPravinBaaskar
👕 @NjSatz
🎙️ @RIAZtheboss @V4umedia_
🎨🖼️ @kabilanchelliah
🤝 @gkmtamilkumaran… pic.twitter.com/4XOg3sozSs
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments