தமிழ் சினிமாவின் வரலாற்று சாதனை: 'பொன்னியின் செல்வன்' முதல் நாள் வசூல் அறிவிப்பு!
- IndiaGlitz, [Saturday,October 01 2022]
மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் நேற்றைய முதல் நாள் வசூல் தமிழ் சினிமாவின் வரலாற்று சாதனை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக நேற்று ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. தமிழகத்தில் மட்டும் சுமார் 700 திரையரங்குகளில் ரிலீஸான நிலையில், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வட இந்தியாவில் ஏராளமான திரையரங்குகளில் வெளியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதுமட்டுமின்றி அமெரிக்கா, கனடா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் பெருவாரியான திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 80 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 100 வருட தமிழ் சினிமாவில் முதல் நாளில் இதுவரை எந்த படமும் ரூ.80 வசூல் செய்யாத நிலையில் வரலாற்று சாதனையை ‘பொன்னியின் செல்வன்’ படம் படைத்து உள்ளது.
இதுகுறித்த அட்டகாசமான போஸ்டரை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
Thank you for giving #PS1 the biggest ever opening day for Tamil cinema worldwide!#PonniyinSelvan1 #ManiRatnam @arrahman @MadrasTalkies_ @LycaProductions @tipsoffical @tipsmusicsouth pic.twitter.com/mhFEB66jF0
— Lyca Productions (@LycaProductions) October 1, 2022