'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்': சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட லைகா!
Send us your feedback to audioarticles@vaarta.com
நீண்ட இடைவேளைக்கு பின்னர் ’நாய்சேகர் ரிட்டன்ஸ்’ என்ற திரைப்படத்தில் மீண்டும் வைகைப்புயல் வடிவேலு ரீ-என்ட்ரி ஆகிறார் என்பதும் இந்த படத்தின் பாடல் கம்போசிங் பணிகளுக்காக சமீபத்தில் இயக்குநர் சுராஜ், நடிகர் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் லண்டன் சென்று இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்றுமுன் லைகா நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் பாடல்கள் கம்போசிங் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் லைகா நிறுவனர் சுபாஷ்கரன், இயக்குனர் சுராஜ், வைகைப்புயல் வடிவேலு, இசையமைப்பாளர் சந்தோஷ் சிவன் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் ஷிவாங்கி நடிக்கவிருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#NaaisekarReturns songs getting composed in London, work in full swing! @Music_Santhosh is with the team including #VaigaiPuyal #Vadivelu, @Director_Suraaj, Lyca Productions founder #Subaskaran, Deputy chairman #Prem & Tamilnadu @LycaProductions head #GKMTamilkumaran ???? pic.twitter.com/ar6G97a2gf
— Lyca Productions (@LycaProductions) January 12, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com