close
Choose your channels

'வாலு பார்ட்டி': லைகாவின் அடுத்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ்..!

Monday, May 15, 2023 • தமிழ் Comments
Jai
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் அடுத்த படத்தின் சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகி இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களில் ஒன்று ’தீரா காதல்’. ஜெய் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படம் வரும் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ’வாலு பார்ட்டி’ என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இசையமைப்பாளர் சித்துகுமார் கம்போஸ் செய்த இந்த பாடலை சத்ய பிரகாஷ், பிரார்த்தனா ஸ்ரீராம் ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடலை எஸ்.என்.அனுராதா எழுதியுள்ளார்.

ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னாள் காதலராக இருந்த நிலையில் ஜெய் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட பின் மீண்டும் ஐஸ்வர்யா ராஜேஷை சந்திப்பதும் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் தான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்வேதா உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை ரோஹின் வெங்கடேசன் இயக்கி உள்ளார். சித்து குமார் இசையில் ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவில் பிரசன்னா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவாகிய இந்த படம் காதலர்களின் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment