ஆயுதபூஜை தினத்தை குறிவைக்கும் லைக்காவின் 2 படங்கள்

  • IndiaGlitz, [Tuesday,July 31 2018]

சாதாரண நாட்களில் வெளியாகும் திரைப்படங்களை விட விடுமுறை தினங்களில் வெளியாகும் திரைப்படங்களின் வசூல் அதிகளவில் இருக்கும் என்பதால் பிரபல நடிகர்களின் படங்கள் விடுமுறை தினத்தை குறிவைத்து ரிலீஸ் செய்ய திட்டமிடப்படுகின்றன. அதிலும் குறிப்பாக பொங்கல் மற்றும் ஆயுதபூஜை தினங்களில் நீண்ட விடுமுறை இருக்கும் என்பதால் இந்த நாட்களில் படங்களை ரிலீஸ் செய்வதில் போட்டி அதிகமாக இருக்கும்

அந்த வகையில் வரும் அக்டோபர் 18ஆம் தேதி வரவிருக்கும் ஆயுத பூஜை தினத்தில் திரையிட பிரபல நடிகர்களின் படங்கள் போட்டியில் இறங்கியுள்ளன.

ஏற்கனவே விஷாலின் 'சண்டக்கோழி 2' மற்றும் ஜோதிகாவின் 'காற்றின் மொழி' ஆகிய படங்கள் ஆயுத பூஜை தினத்தில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது தனுஷின் 'வடசென்னை' திரைப்படம் இந்த போட்டியில் இணையும் வாய்ப்பு உள்ளது.

அதேபோல் ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் 'அர்ஜூன் ரெட்டி' ஹீரோ விஜய்தேவரகொண்டா நடித்த 'நோட்டா' திரைப்படமும் ஆயுத பூஜை தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேற்கண்ட தகவல்கள் உறுதி செய்யப்பட்டால் 'சண்டக்கோழி 2', 'வடசென்னை' ஆகிய இரண்டு லைக்கா நிறுவனத்தின் படங்கள் ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.