உலகிலேயே சொந்தமாக ரயில் வைத்து இருந்த சொகுசு தமிழர்… சிறப்பான வரலாற்றுப் பக்கங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனி விமானம் பயன்படுத்தும் இந்தக் காலத்தில்கூட யாரும் ஒரு ரயிலைச் சொந்தமாக வைத்து இருப்பதில்லை. ஆனால் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழர் ஒருவர் சொந்தமாக ரயிலை வாங்கிப் பயன்படுத்தி இருக்கிறார். அதோடு இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு பின்பு சொந்தமாக கார் வாங்கி பயன்படுத்திய இந்தியரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்த 18 ஆம் நூற்றாண்டில் சென்னையில் ஒரு பில்டிங் கான்ட்ராக்டராக பணியாற்றியவர் நம்பெருமாள் செட்டியார். இவர் அந்தக் காலத்திலேயே சென்னை பல்கலைக்கழகத்தில் பிஏ படித்து இருக்கிறார். அதோடு ஆங்கிலேய அதிகாரிகளுக்கு மத்தியில் மிகுந்த செல்வாக்கு மிக்க ஒரு மனிதராகவும் வாழ்ந்து இருக்கிறார்.
இவரது பாரம்பரியமான கட்டிட அமைப்பு திறமையால் உருவானதுதான் சென்னையில் உள்ள சட்டக்கல்லூரி, எழும்பூரில் உள்ள சிற்பக்கலை பல்கலைக்கழகம், கன்னிமாரா நூலகம், பாரிமுனையில் சென்னை உயர்நீதிமன்ற கட்டம் போன்றவை. மேலும் சென்னையில் நாம் இப்போது பார்க்கும் பாரம்பரிய அடையாளச் சின்னங்களாக உள்ள பல சிவப்பு நிறக் கட்டங்களைக் கட்டியவரும் இவர்தான்.
ஒரு பில்டிங் கான்ட்ராக்டராக இருந்து கொண்டு ஆங்கிலேயர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க இந்தியராக திகழ்ந்தார். மேலும் பாந்தியன் சாலையில் இருந்து ஹாரிங்டன் சாலை வரைக்கும் உள்ள அனைத்து நிலங்களும் இவருக்குச் சொந்தமாக இருந்து இருக்கிறது. அந்த அடிப்படையில் “செட்டியார் பேட்டை“ என அழைக்கப்பட்ட இந்தப் பகுதி பின்னாட்களில் “சேத்துப்பட்டு“ என மருவியதும் குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய செல்வந்தராக வாழ்ந்து வந்த இவர் அந்தக் காலத்திலேயே எம்.சி-3 எனும் காரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தி இருக்கிறார். இதனால் இந்தியாவில் முதன் முதலில் கார் பயன்படுத்திய இந்தியர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்து இருக்கிறது.
மேலும் 4 பெட்டிகள் கொண்ட ஒரு ரயிலை சொந்தமாக வாங்கிப் பயன்படுத்தி இருக்கிறார். இந்த ரயிலை சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளுவர் அருகில் உள்ள வீரராகவ பெருமாள் கோயிலுக்கு சென்று வருவதற்கு நம்பெருமாள் செட்டியார் பயன்படுத்தி இருக்கிறார். மற்ற நேரங்களில் இந்த ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே நிற்குமாம்.
பெரும் சொத்துக் குவியலுக்கு சொந்தக்காரரான நம்பெருமாள் செட்டியார் சேத்துப்பட்டு அருகில் உள்ள வெள்ளை மாளிகை எனும் பிரம்மாண்ட கட்டிடத்தில் வாழ்ந்துள்ளார். பின்னாட்களில் இது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தான் சேர்த்து வைத்த பெரும்பகுதி சொத்துக்களை இவர் வைணவ கோயில்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் செலவழித்து இருக்கிறார். அதோடு இவரது அறக்கட்டளை மூலம் தாட்டிக்கொண்ட நாச்சராம்மா என்ற பெயரில் ஒரு பெரிய மருத்துவமனையும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
கணிதமேதையான இராமானுஜரின் இறுதிக் காலத்தில் அவரை அரவணைத்துக் கொண்டவரும் இவரே. இப்படி கட்டிடப் பணிகளில் திறமைக்கொண்ட நம்பெருமாள் செட்டியார் ஆங்கிலேயர்களுக்கு மத்தியில் செல்வாக்கு செலுத்தியதோடு கல்வி, அறக்கட்டளை, மருத்துவமனை, கோவில் திருப்பணி எனத் தனது சொத்துகளை வாரிக் கொடுத்து ஒரு மகத்துவமான மனிதராக இருந்து இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com