பெட்டில் சுகமா படுத்துக்கொண்டு படம் பார்க்க ரூ.25 லட்சம் சம்பளமா? பலே தகவல்!
- IndiaGlitz, [Tuesday,October 19 2021]
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று விதவிதமான புதுப்புது மெத்தைகளில் படுத்துக்கொண்டு தினமும் Netfilx-இல் படம்பார்க்க ரூ.25 லட்சத்தை சம்பளமாக அளிக்க முன்வந்துள்ளது. இந்தத் தகவல் சோஷியல் மீடியாவில் தற்போது பரபரப்பை கிளப்பி வருகிறது.
இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் crafted beds எனும் நிறுவனம் ஆடம்பரமான மெத்தைகளைத் தயார்செய்து விற்றுவருகிறது. மேலும் இந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வண்ணம் அவர்களுக்கு வசதியான மெத்தைகளை உருவாக்கவும் முனைப்பு காட்டிவருகிறது. இதனால் மெத்தைகளின் உண்மைத் தன்மையை அறிய “Netfilx and chill“ எனும் திட்டத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்தத் திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்படும் ஊழியர் வாரத்திற்கு 37.5 மணிநேரம் படுக்கையில் படுத்துக்கொண்டே Netfilx-இல் படம் பார்க்க வேண்டும். இதற்கு ஆகும் செலவை அந்நிறுவனமே பார்த்துக் கொள்ளும். மேலும் வாரத்திற்கு ஒரு புது மெத்தை ஊழியரின் வீடு தேடிவந்துவிடும். அவர் மெத்தையில் படுத்தவாறே நெட்ஃபிளிக்ஸில் படம் பார்த்துவிட்டு, அந்த மெத்தை எவ்வளவு சுகமாக இருக்கிறது? அல்லது எவ்வளவு நெகடிவ் தன்மையைக் கொண்டிருக்கிறது? என்பதை ரிப்போர்ட்டாக நிறுவனத்திற்கு அனுப்பினால் மட்டும் போதுமானது.
இந்த வேலையை செய்வதற்கு crafted beds நிறுவனம் மாதம் ஒன்றிற்கு 24,000 டாலர்களை ஊதியமாக வழங்கும். இந்திய மதிப்பில் இந்த சம்பளம் ரூ.25 லட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது.