கோபா அமெரிக்க கால்பந்து கோப்பை- இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது பிரேசில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நேரத்தில் ரசிகர்கள் இன்றி 47 ஆவது கோபா அமெரிக்க கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் அரை இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற பிரேசில் மற்றும் பெரு அணிகள் தங்களுக்குள் மோதிக்கொண்டன. இந்தப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற பிரேசில் அணி தற்போது இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்று இருக்கிறது.
47 ஆவது கோபா தென் அமெரிக்க கால்பந்து போட்டியின் அரை இறுதிச்சுற்றுக்கு பிரேசில், பெரு, அர்ஜென்டினா, கொலம்பியா எனும் 4 அணிகளும் தகுதிப்பெற்று இருந்தன. இந்நிலையில் பெரு- பிரேசிலுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் கடுமையான நெருக்கடிக்கு இடையே பிரேசில் வீரர் 34 ஆவது நிமிடத்தில் திறமையாக கோல் அடித்து முன்னேறியார். ஆனால் ஆட்டநேர இறுதி வரை எந்த கோலையும் அடிக்காத பெரு இந்தப் போட்டியில் பின்தங்கியது. இதனால் பிரேசில் இறுதிப் போட்டிக்குத் தகுதிப்பெற்று இருக்கிறது.
இதையடுத்து அர்ஜெண்டினா மற்றும் கொலம்பியா இரு அணிகளும் மேதிக்கொள்ள இருக்கின்றன. இதில் யார் வெற்றிப் பெறுவார்களோ அவர்களுடன் பிரேசில் அணி வரும் 11 ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் மோத உள்ளது. கொரோனா நேரத்தில் கோபா அமெரிக்கன் கால்பந்து போட்டிகள் ரசிகர்களிடைய அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் கோப்பையை வெல்லப்போவது யார்? என்ற ஆர்வம் அதிகரித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout