தீபாவளி விருந்தாக டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் 'லப்பர் பந்து'.. வீட்டுக்கே வரும் கெத்து-அன்பு..!

  • IndiaGlitz, [Friday,October 25 2024]

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது சந்தாதாரர்களுக்கு தீபாவளி பரிசாக, சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற சூப்பர்ஹிட் திரைப்படமான லப்பர் பந்து திரைப்படத்தினை அக்டோபர் 31 முதல் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது.

லப்பர் பந்து திரைப்படத்தினை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ளார். ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வஸ்விகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் காளி வெங்கட், பால சரவணன், கீதா கைலாசம், தேவ தர்ஷினி, ஜென்சன் திவாகர் மற்றும் டிஎஸ்கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

ஒரு சிறு கிராமத்தில் உள்ளூர் கிரிக்கெட் விளையாடும் இரண்டு கிரிக்கெட் காதலர்களின் ஈகோவை சுற்றி நடக்கும் ஒரு எளிய ஸ்போர்ட்ஸ் டிராமாவாக தொடங்கும் இந்தத் திரைப்படம், சத்தமில்லாமல் சமூகத்தில் ஆழமான வேரூன்றியிருக்கும் சாதி, பணம் எனப் பல வேறுபாடுகளை, அடுக்குகளைக் கடக்க, விளையாட்டு ஒரு கருவியாக மக்களுக்கு உதவும் என்பதைக் காட்டுகிறது.



திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படம், தமிழ்நாட்டின் வேலூர்-ஆம்பூர் பகுதியில் படமாக்கப்பட்டது மற்றும் இப்படம் ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவராலும் முழு மனதுடன் பாராட்டப்பட்டது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான லப்பர் பந்து திரைப்படத்தில் ஒளிப்பதிவு தினேஷ் புருஷோத்தமன், இசை ஷான் ரோல்டன், படத்தொகுப்பு மதன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

More News

கவினின் 'பிளடி பெக்கர்' ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சான்றிதழ் தகவல்..!

கடந்த சில மாதங்களாக வெளியாகி கொண்டிருக்கும் திரைப்படங்கள் இரண்டரை மணி நேரத்திற்கு அதிகமாக, சில படங்கள் 3:00 மணி நேரத்திற்கு அதிகமாக ரன்னிங் டைம் கொண்டதாக இருக்கும்

'கங்குவா' படத்தை மிஸ் செய்த பிரபல நடிகை.. 'சூர்யா 45'ல் இணைவதாக தகவல்..!

சூர்யா நடிக்க இருக்கும் 45வது திரைப்படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கும் நிலையில், இந்த படத்தின் நாயகியாக நடிக்க பிரபல நடிகை ஒருவர் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும்,

சிவகார்த்திகேயனின் 'அமரன்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கின்ற நிலையில், இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது

ஒன்றுக்கும் மேற்பட்ட வைல்ட்கார்ட் போட்டியாளர்கள்.. அதில் ஒருவர் எவிக்ட் ஆனவரின் மனைவியா?

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது ரவீந்தர் மற்றும் அர்னவ் ஆகிய இரண்டு போட்டியாளர்கள் எவிக்சன் ஆகியிருக்கும்

திடீரென நின்று போன திருமணம்.. 50 சவரன் நகைகளை கொடுத்து ஏமாந்த சீரியல் நடிகை..!

பிரபல சீரியல் நடிகைக்கு சிங்கப்பூரை சேர்ந்த பைலட் ஒருவருடன் திருமணம்  நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென திருமணம் நின்று போய்விட்டதாகவும், மாப்பிள்ளை வீட்டாரிடம்