தீபாவளி விருந்தாக டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் 'லப்பர் பந்து'.. வீட்டுக்கே வரும் கெத்து-அன்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது சந்தாதாரர்களுக்கு தீபாவளி பரிசாக, சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற சூப்பர்ஹிட் திரைப்படமான லப்பர் பந்து திரைப்படத்தினை அக்டோபர் 31 முதல் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது.
லப்பர் பந்து திரைப்படத்தினை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ளார். ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வஸ்விகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் காளி வெங்கட், பால சரவணன், கீதா கைலாசம், தேவ தர்ஷினி, ஜென்சன் திவாகர் மற்றும் டிஎஸ்கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
ஒரு சிறு கிராமத்தில் உள்ளூர் கிரிக்கெட் விளையாடும் இரண்டு கிரிக்கெட் காதலர்களின் ஈகோவை சுற்றி நடக்கும் ஒரு எளிய ஸ்போர்ட்ஸ் டிராமாவாக தொடங்கும் இந்தத் திரைப்படம், சத்தமில்லாமல் சமூகத்தில் ஆழமான வேரூன்றியிருக்கும் சாதி, பணம் எனப் பல வேறுபாடுகளை, அடுக்குகளைக் கடக்க, விளையாட்டு ஒரு கருவியாக மக்களுக்கு உதவும் என்பதைக் காட்டுகிறது.
திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படம், தமிழ்நாட்டின் வேலூர்-ஆம்பூர் பகுதியில் படமாக்கப்பட்டது மற்றும் இப்படம் ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவராலும் முழு மனதுடன் பாராட்டப்பட்டது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான லப்பர் பந்து திரைப்படத்தில் ஒளிப்பதிவு தினேஷ் புருஷோத்தமன், இசை ஷான் ரோல்டன், படத்தொகுப்பு மதன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com