'லப்பர் பந்து' அன்பு, கெத்து கேரக்டர்களில் நடிக்க இருந்தவர்கள் இவர்களா? மிஸ் ஆன வாய்ப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஹரிஸ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடித்த ’லப்பர் பந்து’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தில் அன்பு கேரக்டரில் ஹரிஷ் கல்யாண், கெத்து கேரக்டரில் தினேஷ் நடித்திருக்கும் நிலையில் இந்த கேரக்டர்களில் நடிக்க முதலில் அணுகப்பட்ட நடிகர்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 20ஆம் தேதி வெளியான ’லப்பர் பந்து" திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று இரண்டாவது வாரமாக திரையரங்குகளில் வசூலை குவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, அட்டகத்தி தினேஷ் நடித்த கெத்து கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நிலையில், "கெத்து" மற்றும் "அன்பு" ஆகிய இரண்டு கேரக்டர்களில் முதலில் ஹிப் ஹாப் தமிழா ஆதி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகிய இருவரிடம் பரிசீலனை செய்யப்பட்டதாகவும், ஆனால் இருவருமே அந்த கேரக்டரில் சில காரணங்களால் நடிக்கவில்லை என தெரிகிறது. அதன் பின்னர் "கெத்து" கேரக்டர் எஸ். ஜே. சூர்யாவுக்கு சென்றதாகவும், அவர் பிஸியாக இருந்ததால் தினேஷ் அந்த கேரக்டரில் நடித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், ’லப்பர் பந்து’ கேரக்டரில் நடித்த ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகிய இருவருக்கும் தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ஹிப் ஹாப் தமிழா, ஆதி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகிய இருவரும் இந்த படத்தை தவறவிட்டார்களே என்று தான் எண்ண தோன்றுகிறது.
இந்த நிலையில், ’லப்பர் பந்து’ கேரக்டர்களை வேண்டாம் என்று கூறிய ஹிப் ஹாப் தமிழா ஆதி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகிய இருவரும் "கடைசி உலகப் போர்" என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில், அந்த படம் ’லப்பர் பந்து’ வெளியான அதே நாளில் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com