'லப்பர் பந்து' அன்பு, கெத்து கேரக்டர்களில் நடிக்க இருந்தவர்கள் இவர்களா? மிஸ் ஆன வாய்ப்பு..!

  • IndiaGlitz, [Monday,September 30 2024]

ஹரிஸ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடித்த ’லப்பர் பந்து’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தில் அன்பு கேரக்டரில் ஹரிஷ் கல்யாண், கெத்து கேரக்டரில் தினேஷ் நடித்திருக்கும் நிலையில் இந்த கேரக்டர்களில் நடிக்க முதலில் அணுகப்பட்ட நடிகர்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 20ஆம் தேதி வெளியான ’லப்பர் பந்து திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று இரண்டாவது வாரமாக திரையரங்குகளில் வசூலை குவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, அட்டகத்தி தினேஷ் நடித்த கெத்து கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில், கெத்து மற்றும் அன்பு ஆகிய இரண்டு கேரக்டர்களில் முதலில் ஹிப் ஹாப் தமிழா ஆதி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகிய இருவரிடம் பரிசீலனை செய்யப்பட்டதாகவும், ஆனால் இருவருமே அந்த கேரக்டரில் சில காரணங்களால் நடிக்கவில்லை என தெரிகிறது. அதன் பின்னர் கெத்து கேரக்டர் எஸ். ஜே. சூர்யாவுக்கு சென்றதாகவும், அவர் பிஸியாக இருந்ததால் தினேஷ் அந்த கேரக்டரில் நடித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், ’லப்பர் பந்து’ கேரக்டரில் நடித்த ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகிய இருவருக்கும் தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ஹிப் ஹாப் தமிழா, ஆதி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகிய இருவரும் இந்த படத்தை தவறவிட்டார்களே என்று தான் எண்ண தோன்றுகிறது.

இந்த நிலையில், ’லப்பர் பந்து’ கேரக்டர்களை வேண்டாம் என்று கூறிய ஹிப் ஹாப் தமிழா ஆதி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகிய இருவரும் கடைசி உலகப் போர் என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில், அந்த படம் ’லப்பர் பந்து’ வெளியான அதே நாளில் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இன்று முதல் ட்ரிம் செய்யப்பட்டது 'மெய்யழகன்'.. எத்தனை நிமிடங்கள் தெரியுமா?

கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடித்த 'மெய்யழகன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் ரன்னிங் டைம் இன்று முதல் 18 நிமிடங்கள் குறைக்கப்பட்டதாக

'விடுதலை' இன்னொரு வெர்ஷனில் சசிகுமார்.. கிளிம்ப்ஸ் வீடியோ..!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான "விடுதலை" திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இதே டைட்டில் ஆனால் ஆங்கிலத்தில் 'Freedon' என்ற பெயரில்

ட்விட்டரில் ஒன்னுமே இல்லையே..! துணை முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தாரா ரஜினிகாந்த்?

தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளும்

விஜய்யின் 'தளபதி 69' படத்தின் கதை இதுவா? தேர்தல் நேரத்தில் சரியான கதை தான்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69வது திரைப்படத்தை எச் வினோத் இயக்கவிருக்கும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு, தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு முடிந்த பிறகு தொடங்கும் என்று

அட்லியின் 6வது படம்.. ஒரே படத்தில் 3 பிரபலங்களா?

இயக்குனர் அட்லியின் 6வது திரைப்படத்தில் மூன்று பிரபலங்கள் இணைய இருப்பதாகவும், கிட்டத்தட்ட இந்த படம் உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.